Sunday, May 15, 2011

ஒசாமா பின்லேடன் எத்தனை தடவைகள் கொல்லப்படுவார்?


- முஹம்மட் பிறவ்ஸ்

அமெரிக்காவால் பிடிக்கமுடியாமல் இருந்த ஒசாமா பின்லேடன் அண்மையில் கொல்லப்பட்டுவிட்டதாக பராக் ஒபாமா அறிவித்திருந்தார். டீ.என்.ஏ. பரிசோதனை மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் டோராபோரா மலையில் அவரைக் கொன்ற அமெரிக்கா தற்@பாது பாகிஸ்தான் வரை கொன்று கொண்டுதான் இருக்கின்றது.
பல வருடகாலமாக சல்லடை போட்டுத்தேடிய அமெரிக்காவுக்கு ஒசாமாவின் ஒரேயொரு படத்தை மட்டும்தான் காட்டமுடிந்ததா? தனது நாட்டை துவம்சம் செய்த அவரை சர்வதேசத்திற்கு அடையாளம் காட்டி அவரது மரணம் ஏனையோருக்கு (முஸ்லிம்களுக்கு) பாடமாக இருக்குமென அச்சமூட்டி எச்சரிக்கை செய்யமுடியால்போனது ஏன்?

ஒரேயொரு புகைப்படத்தை மட்டும்காட்டி இவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று அமெரிக்கா சொன்னால், நாமெல்லாம் நம்பத்த தயாராக இருக்கின்@றாம் என்ற நம்பிக்கைதான் காரணம். அவர்கள் வெளியிட்ட அந்த ஒரேயொரு புகைப்படத்தை உங்களால் நம்பமுடிகின்றதா? ஒரு புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து அதனை மக்களிடம் காட்டி ஏமாத்தியிருக்கிறது என்றால், நம்மில் அனேகமானோர் அதை நம்பத் தயாராக இல்லை. காரணம் டீ.என்.ஏ. ரிப்போர்ட் சொல்கிறது என்று காரணம் கூறுவோம். இதுதான் டீ.என்.ஏ. ரிப்போர்ட் என்று ஊடகங்களுக்கு காட்டப்பட்டதா? இல்லையே, தான் விரும்பியபடி ஒரு டீ.என்.ஏ. ரிப்போர்ட்டை தயாரிக்க முடியாதிருந்தால் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா இருப்பதில் நியாயமில்லை.

இங்குள்ள புகைப்படத்தை நன்றாகக் கவனியுங்கள். இதுதான் ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டதுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியிட்ட ஒரேயொரு ஆதாரம். இது உண்மையில் இரண்டு புகைப்படங்களுடன் சேர்த்து ஒசாமாவின் உருவத்தைக் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிக்கிறது.

இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள்.

01. ஒரெயொரு புகைப்படம் மட்டுமே வெளியானது.
02. அதுவும் தலை மட்டுமே காணப்பட்டது.
03. அருகிலுள்ள புகைப்படத்தையொத்த திசையிலேயே அந்தப் படம் உள்ளது.
04. இரண்டிலும் வாயின் அசைவு அப்படியே உள்ளது.
05. வீடியோக் காட்சி வெளிவரவில்லை.
06. தாடி அப்படியே இரத்தக்கறை இல்லாமல், குழைந்துபோகாமல் அதேமாதிரி இருக்கின்றது.
07. உரோமம் (முடி) உயிரற்றது. கொம்புருப்பொருளால் ஆனது. அது ஒருவர் இறந்தவுடன் வாடிப்போய்விடுவதில்லை. நீட்டிக்கொண்டிருந்த ஒசாமாவின் தாடி அவர் இறந்தவுடன் ஏன் முடிங்கிக்கொண்டது?
08. வலதுபக்கம் தாடியின் கரைப்பகுதியில் Photoshop Eraser Tool பயன்படுத்தப்பட்டுள்ளது.
09. இடதுபக்கம் தாடியின் ஓரப்பகுதியை மறைப்பதற்காக புகைப்படம் வெட்டப்பட்டுள்ளது. (ஒசாமா பின்லேடனின் தாடி சீராக ஒருபோதும் இருந்ததே இல்லை. எப்போதும் வெளியில் நீட்டிக்கொண்டுதான் இருக்கும். Photoshop மென்பொருளைப் பயன்படுத்தி அந்தப் புகைப்படத்தை வடிவமைத்த அந்த "டிசைனருக்கு' அவரது தாடியில் நீட்டிக்கொண்டிருக்கும் முடிகளை வெட்ட சிரமமாக இருந்திருக்கும்)
10. அடுத்த புகைப்படத்தில் அதே கண்ணில் காயம்பட்ட மனிதருடன் அவரது முகபாவணையும் ஒத்துப்@பாகின்றது.
11. முதலாவது படம் ஒசாமாவின் படத்துடன் மூக்குக்கு மேலும் இரண்டாது படம் மூக்குக்கு கீழும் Photoshop மென்பொருளில் உள்ள "குளோனிங் டூல்' பயன்படுத்தப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
12. படத்தின் கிழுள்ள பகுதி ஒரு நிறத்திலும் மேலுள்ள பகுதி இன்னொரு நிறத்திலும் காணப்படுகின்றது.
13. ஒரே படத்தில் இருவேறு `Pixcel' அளவுகளில் படங்கள் இருக்கின்றன.

இரத்தக் கறையுடன் அரைக்கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இது 2 ஆண்டுகளுக்கு முன்பே பல இணையத்தளங்களில் வெளியானது என்றும் தற்@பாது தெரியவந்துள்ளது. 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடனின் புகைப்படத்துடன் அடையாளம் தெரியாத ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்கபட்டதுதான் இப்படம். இதுவே பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.

பின்லேடனை ஓரிடத்தில் அடக்கம் செய்தால்,அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடும் என்று அமெரிக்கா அஞ்சி சடலத்தை புதைக்காமல் கடலில் வீசிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. பத்து வருடமாக அமெரிக்காவுக்கு தண்ணிகாட்டிய பின்லேடனை ஒரு புகைப்படம்கூட எடுக்காமலும் ஊடகங்களுக்கு காட்டாமலும் கடலில் வீசிவிட்டதாகச் சொல்ல்வது தான் ஆடிய நாடகத்தை அப்படியே அம்பலப்படுத்துவதாக@வ காணப்படுகின்றது.

ஒபாமா பின்லேடன் கொல்லப்படுவதை நேரடியாகப் பார்த்ததாகவும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளார். இந்தப் படங்களை வெளியிட்டால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்லேடனின் மரணம் சமூக வலையமைப்புத் தளங்களில் பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக, அமெரிக்க ஆதரவாளர்களால் சில விசமத்தனங்களும் பேஸ்புக்கில் அரங்கேற்றப்பட்டன. Osama Killed Live Video எனும் பேஸ்புக் பேஜஸ் மூலம் "ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடி வீடியோக்காட்சி' என்று எமது நண்பர்கள்மூலமாக நமக்கு அந்த லிங்க அனுப்பப்பட்டது. அந்தப் பக்கத்திற்குச் சென்றால் அங்குள்ள பேஜை `லைக்' பண்ணிவிட்டு அங்குள்ள அட்ரஸை, அட்ரஸ்பாரில் கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுமாறு சொல்லப்பட்டது. அவ்வாறு பேஸ்ட் பண்ணியதும் 2+3=? எத்தனை என்று கேட்கப்படுகின்றது. அதற்கு நம்மால் பதில் அளிக்க முடியாமல் செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் நேரம் பொறுத்திருக்குமாறும் சொல்லப்படுகின்றது. பின்னர் நாம் பின்லேடனின் வீடியோவைப் பார்த்துவிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதாக நமது Wall இல் Share ஆகுகின்றது. அதை பிறிதொருவர் கிளிக் செய்தால் மீண்டும் 2+3=? என்ன என்று கேட்கிறது. தற்பொழுது அந்த பேஜ் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இப்போதும் தனது சின்னப்பிள்ளைத் தனத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது.

பின்லேடன் கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். அதன் உண்மைத்தன்மை பற்றி நமக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆனால், இந்த புகைப்படத்தை வெளியிட்டு பூச்சாண்டி காட்டியது ஏன்? இதன் பின்னணி என்ன? ஒபாமா முஸ்லிம் ஆதரவாளர் என்றொரு கருத்தும் நிலவுகின்றது. அவர் ஒபாமாவின் உயிரைக் காப்பாற்றி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாரா? அல்லது அவர் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல "நான் பின்லேடனைப் பிடிப்பேன்' என்பதைக் நிரூபித்துக்காட்ட நினைத்தாரா?

ஆகமொத்தத்தில் அமெரிக்கா, தான் என்ன சொன்னாலும் உலகநாடுகள் கேட்க்கும் என்பதை ஒரு புகைப்படம் மூலமாக நிருபித்துக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் இந்த கபட நாடகம் நம்மில் அனேகமானோருக்குத் தெரிந்திருக்கி நியாயமில்லை.

இந்த ஆதாரங்களை எனது பேஸ்புக்கில் நான் பகிரங்கமாக வெளியிட்டபோது எனது பேஸ்புக் கணக்கையும் சில விசமிகள் (அமெரிக்க ஆதரவாளர்கள்) ஹெக் செய்துவிட்டனர். பிறகு நான் ஒருவழியாக எனக்குத் தெரிந்த வழியில் எனது பேஸ்புக் கணக்கை மீட்டெடுத்துக் கொண்டேன். நாம் உண்மைகளைக் கூறுவதற்கு விளையும்போது எத்தனை ஆபத்துக்கள் நம்மீது ஏவப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் ``ஒரு ஊடகத்தில் உண்மைகளை
சுட்டிக்காட்டவே முடியாத நிலையில்தான் நாம் ஊடகத்துறையில் பணியாற்றுகின்றோம்.''.

No comments: