Tuesday, March 29, 2011

Coming 04th April


23 வயதில் பாட்டியான ரோமானிய பெண்


23 வயதான ரோமானிய பெண், உலகின் மிக இளமையான பாட்டியாக உலக சாதனை படைத்துள்ளார்.
ரிஃப்சா ஸ்டானேஸு எனும் குறித்த பெண் 12 வயதில் தனது முதல் மகளான மரியாவை பெற்றெடுத்தார். என்னை பின்பற்றிவிடாதே என அவர் எடுத்துக்கூறியும் கேட்காமல், மரியா  தனது 11 வயதில், இயொன் எனும் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பக்கத்து கிராமத்தை சேர்ந்த இன்னுமொரு ரோமானியருக்கு தனது தந்தை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்ததாலேயே, தான் 12 வயதில் திருமணம் புரிய நேரிட்டது என கூறும் ரிஃப்சா, அயனெல் எனும் நகை வியாபாரியை மணம் முடித்தார். இவர்களது மகள் மரியா 10 வயதில் கர்ப்பமடைந்ததுடன், பாடசாலை செல்வதையும் நிறுத்தியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தது 6 மாதங்களின் பின்னரே தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், தனக்கு பேரன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ள ரிஃப்கா, மரியாவின் உடல் நலத்திற்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் மணி, 26 வயதில் பாட்டியானதுவே சாதனையாக இருந்தது.

Skype New Office


Monday, March 28, 2011

அரை உடம்பு மனிதன்


இன்றைய நாகரீக உலகில் நடக்கும் அதிசயங்களுக்கு பஞ்சமே இல்லை.
இங்கு ஒருவர் அரை உடம்பை வைத்துக்கொண்டு அசத்தும் செயலை பாருங்கள் எம் கண்களை மிரள வைக்கிறது.
35 வயதுடைய மீற் கெனிக்கு இடுப்புக்கு கீழ் பட்ட பகுதி நீக்கப்பட்ட அரை உடம்புடன் வலம் வருகிறான். இவரின் இரு கைகளையும் சகல தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்.
இவர் இரு குழந்தைகளின் தந்தை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பூனை பெண்


சீனாவின் சனத்தொகை எவ்வாறு அதிகரித்து காணப்படுகிறதோ அதே போல் அங்குள்ள மக்களுக்கும் பல்வேறு விசித்திரமான நோய்கள் காணப்படுகிறது.
பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு மச்சம் எனப்படும் கறுப்பு அடையாளம் காணப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கு அது சற்று பெரிதாகவே காணப்படும். அது போல் சீனாவில் ஒரு பெண்ணுக்கு உடலின் முதுகு கை முகம் போன்ற பகுதிகளில் கறுப்பு மச்சம் போலவும் புனையின் ரோமம் போலவும் காணப்படுகிறது.

மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்


ஆஸ்திரேலியாவின் 15 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் பேஸ்புக் வாயிலாக அழைத்த போது, பேஸ் புக் வாயிலாக அனுப்பியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் விருந்தினர் கலந்துகொள்ள வருவதாக பதில் வந்‌தததையடுத்து மிரண்டு போன மாணவி தனது பிறந்த நாளை ரத்துசெய்துவிட்டார்.
ஆஸ்தி‌ரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்‌தில் உள்ள சாட்ஸ்வுட் நகரி்ல் வசித்து வந்த ஜெஸ் (15) என்ற மாணவி தனது பிறந்த நாளை கொண்டாட தனது நெருங்கிய நண்பர்கள் 10 பேருக்கு சமூக வ‌‌லை தளமான பேஸ்புக் வாயிலாக அழைப்ப விடுத்திருந்தார்.
அழைப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக பேஸ் புக்கி‌னை திறந்து‌ பார்த்த போது ஜெஸ் அதிர்ச்சியடைந்தார்.
ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவி்ல் கலந்துகொள்ள இருப்பதாகவும், பிறந்த நாள் பரிசாக ரூ. 15.59 டாலர் அளவுக்கு பொருட்கள் இருந்ததாகவும் பதில் வந்தது.
வெறும் 10 நண்பர்களுக்கு அனுப்பிய தகவல் 20 ஆயிரம் பேருக்கு எப்படி பேஸ்புக் வாயிலாக பரவியது என தெரியாமல் திகைத்தார்.
இது குறித்து அவரது ஜெஸ்ஸின் தந்தை கூறுகையில், 500 விருந்தினர்களை மட்டும் தான் எனது மகள் பிறந்த நாள் விழாவுக்கு, பேஸ் புக் விளம்பரம் வாயிலாக அழைத்திருந்தேன்.
ஆனால் அது 1லட்சத்து 80 ஆயிரம் பேரை அழைத்ததாக பதில் வந்திருப்பது மோசடி வேலை தான், இதில் என் மகள் எந்த தொடர்பும் இல்லை.
இவளது பேஸ் புக் கணக்கினை யாரே தவறாக பயன்படுத்தி இப்படி ஒரு ‌காரியத்தினை செய்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாடுவதை ரத்து செய்துவிட்டோம் என்றார்.

Friday, March 4, 2011

கி.பி. 3000த்தில்


கிபி மூவாயிரத்துல உலகம் எப்படி இருக்கும்னு காமெடியா ஒரு மெயில் வந்துச்சு, நீங்களும் பாருங்களேன்... நல்ல கற்பனை....


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket
Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket