Friday, August 13, 2010

ரமழான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு ஒபாமா வாழ்த்து


அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் நோன்பு வாழ்த்துகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு காலம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானதையொட்டி வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்:
சிறந்ததொரு உலகைக் கட்டியெழுப்ப நாம் விரும்பினால் அதற்கான மாற்றங்களை எமது இதயத்திலிருந்தும் எமது சமூகத்திலிருந்துமே ஆரம்பிக்க வேண்டுமென்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டுமென ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நிகழ்வொன்றை நடத்த எதிர்பார்த்திருப்பதாகக் கூறியுள்ள ஒபாமா,நீதி,முன்னேற்றம்,சகிப்புத்தன்மை,அனைத்து மனித நடத்தைகளுக்கான கௌரவம் என்பவற்றுக்கான இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை ரமழான் சிந்தனைகள் எமது நினைவிற்கு கொண்டுவருகின்றன.
இங்கு அமெரிக்காவில் ரமழான் நோன்பானது,இஸ்லாம் அமெரிக்காவின் ஓர் அங்கமாக எப்போதும் இருக்கிறது என்பதையும் எமது நாட்டுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் அசாதாரண பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறது.
இந்நிலையில் ரமழான் நோன்பு தினத்தை வரவேற்கும் உலகெங்குமுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.