Saturday, April 30, 2011

மனம் உங்களை ஆளுகிறதா? அல்லது நீங்கள் மனதை ஆளுகிறீர்களா?




- முஹம்மட் பிறவ்ஸ்


ஒவ்வொருவருக்கும் உடலளவில் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். சிலர் ஊனமுற்றவர்களாக இருப்பர் சிலருக்கு உறுப்புகளே இருக்காது. ஆனால், எப்படியாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் இருக்கும். மனம் எப்படியானது என்று பல கவிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம், எல்லாமே தனிவிதம். ஒருவர் மனதில் உள்ளதை இன்னொருவரால் ஊகித்து கிட்டத்தட்ட சொல்லமுடியும். ஆனால், ஒருவன் மனதை இன்னொருவரால் அறியவே முடியாது. இதுவும் பெண்கள் மனது என்றால்…?

ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால்தான் அறியமுடியும் என்பது வெறும் பேச்சுக்காக சொல்வது மட்டுமே. ஒரு பெண் தனது பிரச்சினைகளை இன்னொரு பெண்ணிடம்தான் மனம் திறந்து சொல்லுவாள். அதனால்தான் அப்படி சொல்லியிருக்ககூடும்.
மனம் என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? அதற்கு உருவம் இருக்கிறதா? என்று நம் எல்லோருக்கும் நீண்டகாலமாக சந்தேகம் இருந்து வருகின்றது. மனதைத் தொட்டுச்சொல்லுங்கள்ர்பார்ப்போம் என்றால், எல்லோருமே நமது நெஞ்சில் இடது பக்கமாக கையை வைப்போம். இதை தெரிந்தோ, தெரியாமலே பின்பற்றிவருகின்றோம். நாம் மனம் என்று சுட்டிக்காட்டுவது இதயத்தைத்தான். அங்குதான் மனமும் இருப்பதாக எண்ணுகிறோம். உண்மையை சொல்லப்போனால், இதயம் இடதுபக்கமே இல்லை. இதயம் நெஞ்சறைக் கூட்டின் மத்தியிலிருந்து சற்று இடதுபக்கமாக சாpந்து இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு அப்போ மனமும் இடதுபக்கமாக சற்று சாpந்து இருக்கிறது என்று முடிவெடுத்து விடாதீர்கள். மனம் வேறு, இதயம் வேறு. இதயம் நமது உயிரோட்டத்துக்காக துடித்துக் கொண்டிருப்பதால் நாம் மனம் என்று கருதுகிறோம் தவிர வேறில்லை. இதயம் தானாக துடிப்பதில்லை அதற்கு கட்டளையிடவும் ஒன்று இருக்கிறது. மூளைதான் உடலின் சகல பாகங்களையும் ஆளுகின்றது. அது தனது செய்திகளை (கணத்தாங்கங்களை) நரம்பினூடாக அனுப்புகிறது. மனதுக்கும் மூளைக்கும் தொடர்பிருக்கிறதே தவிர, மனம் மூளையில்லை. முனம் என்பது உருவமில்லா ஓர் உணர்வு. அது வெளிப்படுத்தப்படும் இடம்தான் நமது மூளை.

மனதும் மனதும் ஒத்துப்போனதால் எங்களுக்கு காதல் வந்தது, மனக்கசப்பினால் எங்கள் காதல் முறிவடைந்தது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். காதல் என்றால் மனம், மனம் என்றால் காதல். வீதியில் ஒரு அழகான பெண் போகும்போது மனம் நம்மை திரும்பி பார்க்கச்சொல்லும், அதேசமயம் இது பாவம், தவறான விடயம் என நமது அறிவுக்கு தெரியும். அந்த இடத்தில் நாம் திரும்பிப் பார்த்தால் நம் மனம் நம்மை மிஞ்சிவிடுகிறது. யார் போனால் நமக்கென்ன நமது வேலையைப் பார்ப்போம் என்று நீங்கள் சென்றால், உங்கள் மனம் உங்களுக்கு அடிமை. மனமும் சாத்தனும் மிக நெருங்கிய நண்பர்கள், இரண்டறக்கலந்துவிட்டவடர்கள் வீதியில் ஒருவருடைய பொருள் ஒன்று தவறவிடப்பட்டுக்கிடந்தால், நமது மனம் அந்தப்பொருள் நம்மிடம் இருந்தால் எப்படியிருக்கும்? என்று சிறகடிக்கத் தொடங்கிவிடும். அது யாருடைய பொருளே? தோலைத்தவர்கள் கஷ்டப்படுவார்களே என்று எண்ணத் தோன்றாது. நமது மனம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கும். சில வேளைகளில் வீண் வம்புகளிலும் மாட்டிவிடும்.

முனம் என்பது தவறான விடயமே அல்ல. மனம் சொல்வதை நாம் கேட்டால் பிரச்சினை. நம்மால் மனதைக் கட்டுப்படுத்த முடியுமானால் நமது மனம் நமக்கு அடிமை. மனம் எப்போதும் திறந்திருக்கும். அதை பொறுமை எனும் சாவிகொண்டு பூட்டிவிட்டால் பிரச்சினைகளே வராது. சிலருக்கு மூக்கிலே கோபம் என்பாh;கள். எதற்கெடுத்தாலும் பிரச்சினை, அடிதடி, சண்டை, கோபப்படுதல், திட்டுதல் அவா;களின் ஒரு கணமும் சிந்திக்காது, இதற்கான தீர்வு வன்முறை என்று முடிவுசெய்திடும். இதனால் வருகின்ற பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காது. பிரசினைகள் வந்தபின் அடே, என் மனதைக் கட்டுப்படுத்தியிருக்கலாமே என்று எண்ணத்தோன்றும். அதுதான் நம் மூதாதையர்கள் “மனம் போன போக்கிலே போகாதே, நன்றாக சிந்தித்து செயற்படு” என்று சொல்லுவார்கள். நாம் ஒரு விடயத்தை செய்யும்போது, இதை செய்யத்தான் வேண்டுமா? செய்தால் என்ன பலன்? என்ன பின் விளைவுகள் ஏற்படும்? நமக்கு சாதகமா அல்லது பாதகமா? என்று தூர நோக்கில் சிந்திக்க வேண்டும். எப்படியும் வாழலாம் என்று நினைக்காமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைக்க வேண்டும். ஒரு அறிஞர் கூறும்போது “யார் உண்மையான வீரர்கள் தெரியுமா? போட்டியிட்டு ஜெயிப்பவன் இல்லை, தனது மனத்துடன் போராடி மனதை ஜெயிப்பவன்தான் உண்மையான வீரன்” என்றார். வீரம் என்பது வெளியில் தெரிவதில்லை உங்களுக்குள்ளேயே இருப்பதுதான் உண்மையான வீரம்.

`சொல்பவனைக் கவனியாதே, சொல்வதைக் கவனி' என்று சொல்வார்கள். ஆனால், யாரும் நமக்கு அறிவுரை சொன்னால் பொதுவாகப் பிடிக்காது. நமக்கு அட்வைஸ் பண்ண இவர் யார் என்று கேட்போம். யார் நமக்கு என்ன சொன்னாலும் நம் மனதுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இன்னும் சிலா; வித்தியாசமாக இருப்பாh;கள். யாh; எதைச் சொன்னாலும் அதை சீh;தூக்கிப்பாh;க்காமல் அப்படியே செய்வாh;கள். இது நமக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று யோசிக்கமாட்டார்கள். நாம் வாழ்க்கையில் இப்படியான பல மனிதர்களை சந்தித்திருக்கலாம்.
அவர்களை அவர்களுடைய மனம் மிதமிஞ்சிப்போனால் அவர்கள் பைத்தியக்காரர்ளாகி விடுவார்கள். நாம் என்ன செய்கின்றோம் என்பதை அவர்களாலேயே உணரமுடியாத நிலையில் இருப்பார்கள். அவர்களை எவ்வழியிலும் நம்மால் திருத்த இயலாது. மேலைத்தேய நாடுகளில் (அதிகமாக) மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உளவியல் ஆற்றுப்படுத்துனா;கள் இருப்பார்கள். இவர்களது சேவையானது மிகவும் வித்தியாசமான முறையில் இருக்கும்.

மனங்களின் பல்வகைமைக்கு அவர்கள் வாழும் சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. ஒருவர் மீனவப் பிரதேசத்தில் வளர்ந்தால் அவர்களது மனம் வாழ்வு என்றால் இப்படித்தான் இதுதான் நமது பேச்சு, பாவனை, தொடர்பாடல் என பழக்கப்பட்டுவிடும். அவன் பிறிதொரு சூழலுக்கு செல்லும்போது அவனது மனது கட்டுப்படுத்த (இசைவாக்கமடைய) நீண்டகாலம்
தேவைப்படும்.

நன்றி: இருக்கிறம்

Saturday, April 16, 2011

facebook சமூக மாற்றமா? சமூக சீரழிவா?



-முஹம்மட் பிறவ்ஸ்-


ஆரம்ப காலங்களில் பத்திரிகைகளில் வெளிவந்த `பேனா நண்பர்கள்’ பகுதியே நண்பர்களின் இணைப்புப் பாலமாக இருந்தது. அந்த காலம் மலையேறி பின் கையடக்க தொலைபேசி, இணையத்தள அரட்டை (Chatting) என முன்னேறி இன்று பேஸ்புக், நட்பு வட்டாரங்களுக்கிடையில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. உலகில் தற்போது 20 கோடிக்கு மேலான பாவனையாளர்கள் பேஸ்புக்கில் உள்ளனர். Mail ID இருக்கின்றதா என்று கேட்பதை விடுத்து இன்று பேஸ்புக் கணக்கு இருக்கின்றதா என கேட்கும் அளவுக்கு உலகம் மாறிவிட்டது.

எந்த ஒரு விடயத்திலும் நன்மை தீமைகள் இருக்கத்தான் செய்யும். பேஸ்புக் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த பேஸ்புக் மூலம் பல சமூகப் பிரச்சினைகள் இடம்பெறுவதாகக் கூறி சென்ற மார்ச் மாதம் பேஸ்புக் சேவை நிறுத்தப்படப் போவதாகச் செய்திகள் வெளியாகின. அதன் பின் பேஸ்புக் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. புகைப்படங்களை Save பண்ணுவது, அதிகப்படியான நட்புக்கோரிக்கைகளை விடுப்பது (Friend Request) என்பன தடைசெய்யப்பட்டிருந்தன.

இணையப் பின்தொடரல்கள் தொடர்பாக அண்மையில் பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழக உளவியல் நிபுணர் டொக்டர் எம்மா ஷோர்ட் ஆய்வொன்றை நடாத்தியுள்ளார். இதன் முடிவுகளின்படி இணையக்காதலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இளம் வயது பெண்கள் தங்கள் கற்பையே இழந்த கதைகளை நாம் அன்றாட ஊடகங்களில் அறிந்துள்ளோம். தற்போது பேஸ்புக்கில் அகற்றப்பட்ட 4 இஸ்லாமியப் பக்கங்களை மீண்டும் கொண்டுவராது விட்டால் 2.5 மில்லியன் முஸ்லிம் பாவனையாளர்கள் அதிலிருந்து விலகிவிடப்போவதாக எச்சரிக்கை வேறு விடுத்துள்ளனர்.

நட்பு காதலாக மாறுவதற்கு பேஸ்புக் முதற் காரணியாக இருப்பதாக மேலும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேஸ்புக்கில் அழகான முகங்களைக் கண்டால் நட்புக்கான கோரிக்கையை விடுத்து (கசநைனே சநளூரநளவ) முதலில் நண்பர்களாக இணைந்து கொள்கின்றனர். இது பல விபரீதங்களுக்கு வித்திடுகின்றது. அதிகமானோர் தங்கள் உண்மையான தகவலை தருவதில்லை. இவர்களிடம்தான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். வெளிநாடொன்றில் இருவர் பொய் பெயர்களில் கணக்கு வைத்து அவர்களது நட்பு காதலாகி கசிந்து நேரில் சந்திக்கும்போது மூக்குடைப்பட்ட சம்பவம் நாம் அறிந்ததே. காரணம் சந்தித்துக்கோண்ட இருவரும் தந்தையும் மகளும். இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்வது....

இலங்கையிலும் பேஸ்புக் தொடர்பாக கடந்த மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலங்கை மகளிர், சிறுவர்களுக்கான அமைப்பு பே°புக் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதில் பணமோசடி, பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல் என்பனவே அதிகளவாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான கணக்குகளை வைத்திருப்பவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.



இப்படியான பல சமூக சீர்கேடான விடயங்கள் அன்றாடம் நடந்தேறினாலும் இதில் நன்மைகளும் இல்லாமலில்லை. பல வருடங்களாக காணாமல் போன தந்தையும் மகளும் இணைந்துகொண்டது இந்த பேஸ்புக்கில்தான். அத்தோடு விடுபட்டு போன சொந்தங்கள், உறவுகள் பல மீண்டும் இந்த பேஸ்புக்கின் மூலம் இணைந்துள்ளன. அத்தோடு வெளிநாடுகளில் உள்ளவர்களோடு தொலைபேசியில் உரையாடுவதற்கு கட்டணம் அதிகம் என்றபடியால் அது பலருக்கு சாத்தியமாகாது. அவ்வாறானவர்களுக்கு பேஸ்புக் ஒரு வரப்பிரசாதமே. அத்தோடு உடனடி தகவல் பறிமாற்ற ஊடகமாக பேஸ்புக்கை எடுத்துக்கொள்ளலாம். நாம் மறந்துபோனாலும் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணநாட்களை எமக்கு ஞாபகப்படுத்தி உதவுகிறது.

அத்தோடு பேஸ்புக்கில் பார்ம்வில்லே (FarmVille) விளையாடி ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டமொன்று அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விளையாட்டுகளில் நீங்கள் வாங்கும் கற்பனைப் பொருட்களுக்கு இணையான தொகையை, பேஸ்புக் விளையாட்டுகளை உருவாக்கிய சிங்கா (Zynga) நிறுவனம் உதவிப்பணமாக வழங்கும்.

பேஸ்புக் தொடர்பு என்பது கத்தி மீது நடப்பது போன்றது என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். நமக்கு நன்கு பரீட்சயமான நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் எமது நட்பு பட்டியலில் இணைத்துக்கொள்வது சிறந்தது. நமக்கான ஆபத்தை நாமே விலை கொடுத்து வாங்காமல் வருமுன் காப்பதே சாலச்சிறந்தது.





நன்றி: இருக்கிறம் 11.04.2011

Monday, April 4, 2011

இரவுநேர ரயில் பயணங்களில் நடப்பது என்ன?


- முஹம்மட் பிறவ்ஸ் -

பயணம் மரணம் இரண்டையும் நம் வாழ்நாளில் எப்படியாவது சந்தித்தேயாக வேண்டியிருக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல இடங்களுக்கும் பயணிக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பயணமும் எமக்கு ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றது. அதிலும் ரயில் பயணங்கள் சுவாரஷ்யத்தைத் தருவதோடு படிப்பினைகளையும் தருகின்றன என்பதில் ஐயமில்லை. தலைநகரில் கடமைபுரிபவர்கள் வார இறுதி நாட்களை தங்களது குடும்பத்துடன் கழிப்பதற்காக வௌ;ளிக்கிழமை இரவே தலைநகரிலிருந்து புறப்பட்டுவிடுகின்றனர். விடுமுறையில் வீடு செல்வா;களும் வேறு தேவைகளுக்காகச் செல்வா;களும். தூங்கிக்கொண்டே பயணிக்கலாம் என்ற நப்பாசையில் இரவுநேர ரயில் பயணங்களையே அதிகமக நாடுகின்றனர்.
இப்பொழுது நாட்டில் சுமூகமான சு+ழ்நிலை நிலவுவதால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களிலே அதிகமான கூட்டம் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. கொழும்பு கோட்டையிலிருந்து  மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா நோக்கிச்செல்லும் புகையிரதங்களில் எடுத்துக்கொண்டால் மிகவும் சனநெருக்கடியாக இருக்கும். சிலவேளைகளில் நிற்பதற்குக்கூட கஷ்டமாக இருக்கும். மூன்றாம் வகுப்பு ஆசனச் சீட்டைப் பெற்றுக்கொண்டவர்கள் ஒருவாறு முண்டியடித்துக் கொண்டும் சண்டை பிடித்துக் கொண்டும் தங்களது ஆசனத்தைப் பிடித்துக்கொள்வார்கள். உண்மையிலேயே இரவுநேர ரயில் பயணங்கள் திருப்தியளிக்கின்றனவா? அங்கு நடப்பது என்ன என்று அதில் பயணித்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

ரயில் பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள் வெளியில் வருவது அரிது. காரணம் பாதிக்கப்படபவா;கள் வெளியில் சொல்ல பயப்படுவதே. இதனால் தமக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ அல்லது தமது பெயா; கெட்டுவிடுமோ எனப் பலவாறாகப் பயப்படடுவதால்தான் சமூகத்தில் நுகா;வோருக்கு ஏற்படும் பிர;ச்சனைகளை மக்கள் தட்டிக் கேட்கப் பயந்து வருகின்றனா;. 
குறிப்பாக பயணம்செய்யும் பெண்களுக்கு ஊறு விளைவிக்க என்று ஒரு கூட்டமே அலைகின்றது. துhங்குவதைப் போல பாவனை செய்து அவர;கள் மீது சரிவது. அப் பெண்கள் சற்று கண் அயரும்போது கைகளாலும் கால்களாலும் உராய்வது என்று எல்லாமே நடக்கும். அதுமட்டுமன்றி தண்ணீர; மற்றும் சிறு உணவுவகைகளை விற்பதற்கு இடையில் ஏறும் சிறு வியாபாரிகள் தங்கள் கைகளுக்கு சிக்கும் பொருட்களை திருடிக்கொண்டு போகும் சந்தர;ப்பங்களை நான் எத்தனையோ முறை கண்டும் நமக்கேன் வீண்வம்பு என்று இருந்ததுண்டு. காரணம் நான் அடிக்கடி ரயிலில் செல்பவன். என் பாதுகாப்பும் எனக்கு முக்கியமே. 

அண்மையில் என் அலுவலக நண்பர; ஒருவர; என்னிடம் அலுத்துக்கொண்ட ஒருவிடயம் தன் தங்கைக்கு சீற் புக் பண்ணுவதற்காக அவர; கொழும்பு கோட்டை புகையிரத நிலைத்திற்குச் சென்று அங்குள்ள டிக்கட் கவுண்டாpல் யாராவது பெண்கள் பக்கத்தில் சீட் தருமாறு கேட்டிருக்கின்றார;. அவர;களும் சரி என்று கூறிவிட்டு கடைசியில் ஒரு கிழவரின் பக்கத்தில் புக் செய்து விட்டு இனவாதம் பேசியுள்ளனர;. தன் தங்கையின் பாதுகாப்பு குறித்து அவர; வாயே திறக்காமல் வந்திருக்கின்றார;. அவள் விடிய விடிய அனுபவித்த துண்பங்கள் சொல்லில் அடங்காது. அவ்வளவு தள்ளாத வயதிலும் அந்தக் கிழம் இவள் மீது சாய்வதும் கையால் இடுப்பில் இடிப்பதுமாக இருந்திருக்கின்றது. இவளுக்கோ மொழிப் பிரச்சினை. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவள் சகலத்தையும் பொறுத்துக் கொண்டு ஊh; வந்து சேர;ந்திருக்கின்றாள்.
இவ்வாறான சந்தர;ப்பங்களில் பெண்பிள்ளைகள் தங்கள் பாதுகாப்பு பற்றி சற்றுக் கவனம் செலுத்தவேண்டும். பஸ் வண்டிகளிலும் ரயிலிலும் நடக்கும் இவ்வாறான பிரச்சினைகள் பற்றி எவ்வளவோ எழுதியும் நடந்தது ஒன்றுமில்லை. கூடுமானவரை தங்கள் பாதுகாப்புக்காக ஒருவரை அழைத்துச் செல்லவே வேண்டும். அதுமட்டுமன்றி குட்ட குட்ட குனிபவன் போல இவ் அக்கிரமங்களை தாங்கிக்கொண்டு செல்லாமல் யாரிடமாவது கூறலாம். அல்லது பாதுகாப்பு கருதி எதிர;க்கலாம். விசயம் அம்பலத்துக்கு வரும்போது நிச்சயம் அங்கு ஏதாவது தீர;வு கிடைக்கலாம்.  

இதேபோல் என் இன்னொரு நண்பர; கூறிய விடயம். “காசு கொடுத்தால் இப்ப ஏலாதது ஒண்டுமில்ல. அவையள் புக்கிங் சீற் இல்லை என்று சொல்லிவிட்டு சில சீற்களை ஒதுக்கி வைச்சு கொள்ளுவினம். காரணம் பிறகு யாராவது அவசரமா போகணும் எண்டு கேட்டால் 500 ருபாய்க்கு மேல் வாங்கிக்கொண்டு அதை கொடுப்பாங்கள். நான் எத்தனையோ முறை கண்டிருக்கன். ஏன் நான்கூட ஒருக்கா அவசரம் எண்டு பேரம் பேசி கடைசியா 450 ருபா கொடுத்து விட்டு வந்தன்” என்றார;. “இவற்றைக் கண்டுகொள்ள யாரும் இல்லை. அங்குள்ள மேலதிகாரிகளே இதற்கு துணைசெல்லும்போது என்ன செய்வது” என்று  விசனப்பட்டாh;. ஒரு கம்பார;ட்மெண்டில் 60 சீட் இருக்கும்போது அவசரத்துக்கு ஒரு சீற் வைத்துக்கொள்ளலாம். காரணம் யாராவது கை கால் முடியாதவர; அல்லது கர;ப்பிணித் தாய்மார; வந்தால் கொடுக்கலாம். ஆனால் இவர;கள் செய்வதோ அநியாயம். 10 15 சீற்களை ஒழித்துவைத்துக்கொண்டு அதில் இலாபம் சம்பாதிக்கின்றனர;. இதை உரியவர;கள் ஆதாரத்துடன் மேலிடத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இது தொடரத்தான் செய்யும். இது அதிகமாக இரவு நேர இரயில்களிலே நடக்கின்றன.. இதனால் இங்கு பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.     

சிலவேளைகளில் சில வயது வந்த ஆண்கள் ஒன்றாக சேர;ந்து ரயிலுக்குள்ளேயே மது அருந்தி, பாட்டுப்பாடி, நடனமாடி பயணிகளை இம்சைப்படுத்துவதுண்டு. பெரும்பான்மையினத்தைச்சோ;ந்த இளைஞா;களே அவ்வாறான வேலைகளில் அதிகமாக ஈடுபடுகின்றனா;. சிலரோ கஞ்சா போன்ற பொதைப்பொருட்களை பாவிப்பதையும் அதன்போது விடயம்தொpந்தவா;கள் அந்தப் புகை சுவாசத்திற்குச் செல்லாதவாறு மூக்கைப் பொத்தி அவஸ்த்தைப்படுவதையும் நான் எத்தனையோதடவை கண்டுள்ளேன்.  மதுபோதையில் சில இளைஞா;கள் இளம்பெண்களுக்கு சேட்டை விடுவதும் அவர;களை முறைத்து பார;ப்பதும் கூச்சலிடுவதும் என்று தாங்கள் தான் ரயிலுக்கு சொந்தக்காரர;கள் என்பது போல் நடந்துகொள்வார;கள். அதிகாரிகளோ இவற்றைக் கண்டும் காணாமல் போய்விடுவார;கள். எல்லோரும் துணையோடு செல்வார;கள் என்றில்லை. தனியாகவோ அல்லது இளம் பெண்கள் சேர;ந்தோ போவதுண்டு. இந்நிலையில் அவர;களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இந்த ரயில் பயணங்களில் பெரும்பாலும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் பெண்களே பயணிக்கின்றனர். ரயில் சிநேகம் என்பதைப் போல அதிகமான ரயில் காதல்களும் இங்கேதான் அரங்கேறுகின்றன. அதாவது வரும்போது தனித்து வருபவர்கள் இடையிலேயே ஜோடி சேர்ந்து விடுவார்கள். 

பட்டப்பகலில் பலருக்கு மத்தியில் பயணம் செய்யும்போதே ஆண்களின் தொல்லைகளைத் தாங்க முடிவதில்லை. அதிலும் இரவு நேர பயணம் என்றால் சொல்லவே தேவையில்லை. எத்தனையோ யோசனைகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணம் செய்யும்போது அவர்களது மனநிலை பற்றி சிறிதும் கவலைப்படாது தங்கள் வெறியாட்டத்தைத் தொடங்கிவிடுகின்றனர்.
இது எனக்கு நடந்த ஒரு சம்பவம். ஒரு ரயில் பயணத்தின்போது எனக்கு நல்ல உறக்கம். திடீரென ஒரே சலசலப்பு. சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட நான் சற்று எட்டிப் பார்த்தேன். ஒரு இளைஞன் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தான். தூக்கத்தின்போது எதிரே இருந்த பெண்ணின் உடம்பின்மீது காலை போட்டுவிட்டானாம். அந்தப் பெண் அலறியதில் அவ்விடத்தில் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த இளைஞன் குடித்தும் இருந்தான். பொங்கியெழுந்த ஒருவர் அந்த இளைஞனை தரதரவென இழுத்துச் சென்றார். அப்போது அவனது ஒரு கால் கழன்று விழுந்துவிட்டது. அப்போதுதான் தெரிந்தது அவனது ஒரு கால் செயற்கையாக பொருத்தப்பட்டிருக்கின்றது என்ற உண்மை. இழுத்துச் சென்றவரோ தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் அவனை தொடர்ந்து இழுத்துச்சென்று கழிப்பறையின் அருகில் போட்டுவிட்டார். இவனுக்கு கால் இல்லையே என்று கவலைப்படுவதா? அல்லது போதையில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றான் என்று கோபப்படுவதா? சற்றுத் திரும்பி பார;த்த பிறகுதான் எனக்கு உண்மை புரிந்தது. பெரிய உத்தமனைப் போல நடந்துகொண்ட அந்தப் பேர்வழி குறிப்பிட்ட அந்தப் பெண் அருகே சென்று இளைஞன் இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு தன் மன்மத லீலைகளை லாவகமாக செய்யத் தொடங்கிவிட்டான். அந்தப் பெண்ணும்கூட அதற்கு உடன்பட்டாள். தனது மகள் அருகில் இருக்கிறாள் என்ற நினைப்புக்கூட அவளுக்கு வரவில்லை. பின்னர் அவர்கள் பிரிந்து செல்லும்போது தங்களது முகவரிகளையும் தொலைபேசி இலக்கங்களையும் பரிமாறிக்கொண்டனர். இந்த கருமங்களை என்னவென்று சொல்வது… 

இதில் நடுநிசி வியாபாரிகள் வேறு. ஏற்கனவே தூக்கம் கலைந்த கோபத்தில் சற்று கண் அயர்ந்தேன். என் காதருகில் வந்து கோப்பி.... சிகரட்.... என்றான் ஒரு வியாபாரி. எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன். சிறிதுநேரம் கழிய நல்ல துhக்கத்தில் இருக்கும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு பெண் அலறிக் கத்திக்கொண்டிருந்தாள். அவ்விடத்தில் ஒரே கூட்டமாக இருக்க நானும் எழுந்துசென்று பார;த்தேன். தன் 3 பவுண் தங்கச் சங்கிலியை யாரோ ஒருத்தன் அறுத்துச் சென்றுவிட்டன் என்று அப்பெண் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். வேறுயாருமில்லை அந்த வியாபாhpதான் கோப்பி விற்பதுபோல பாசாங்கு செய்து நோட்டம் பாh;த்து தங்கச்சங்கிலிக்கு ஆட்டையைப் போட்டுவிட்டான் என்று கூடியிருந்தவா;கள் பேசிக்கொண்டனா;. இரவில் எங்கு போய் இவா;களைப் பிடிப்பது?இப்படித்தான் மயக்கமருந்து கலக்கப்பட்ட கோப்பியை பருகக் கொடுத்து செல்போன் உட்பட  பெறுமதிமிக்க நகைகளை  கொள்ளையடித்துச் சென்றதாக அண்மையில் பத்திhpகையொன்றிலும் செய்தியொன்று பிரசுரமாகியிருந்தது. 
இன்று நாட்டில் இவ்வாறான விடயங்கள் வெகு சாதாரணமாக நடக்கத்தொடங்கிவிட்டது. ஆகவே நாம்தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை இரவு நேர ரயில் பயணங்களைத் தவிர;ப்பது நல்லது. தவிர;க்க முடியாத பயணம் என்றால் நகைகளை அணியாமல் பாதுகாப்புடன் செல்லவேண்டும். அப்போது இவ்வாறான விபரீதங்களிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். அல்லது இப்படியான விசமிகளிடமிருந்து தப்புவதற்காக தற்காப்புடன் செல்லவும் தயாராக இருக்கவேண்டும். 
தொட்டதற்கெல்லாம் சட்டம் இயற்றும் அரசாங்கம் இவ்வாறான செயல்களுக்கெதிராகவும் சட்டம் இயற்ற வேண்டும். இந்த விடயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒருசிலர; செய்யும் செயலால் ஏனையோர் குடும்பத்தோடு வெளியே போகமுடியாத நிலை காணப்படுகின்றது. நடக்கும் எல்லா அக்கிரமங்களையும் சகித்துக்கொண்டுதான் பயணிக்கவேண்டுமென்பது நமது தலைவிதியா? நிம்மதியையும் தூக்கத்தையும் தொலைத்த அந்தப் பிரயாணம் உண்மையிலேயே திருப்திகரமானதாக அமையவில்லை. ஆடைத் தொழிற்சாலை யுவதி  காலிழந்த குடிமகன் காதாநாயகனைப் போல வந்த அந்த ஆசாமி நடுநிசி வியாபாரி... அப்பப்பா!  ஒரு பயணத்தில் எத்தனை கதாபாத்திரங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது! அன்றுடன் வெறுத்த இரவு நேர ரயில் பயணம் இன்றுவரை தொடரவில்லை.  

நன்றி: இருக்கிறம் (04.04.2011)


Saturday, April 2, 2011

குறும்படம் நடிக்கும் சச்சின் டெண்டுல்கர்

மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் குறும்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின்.

சச்சினின் தீவிர ரசிகர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர், அதே போல் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர்களில் சச்சினும் ஒருவர்.

இந்த இரண்டு இமயங்களையும் ஒன்றிணைத்து குறும்படம் ஒன்றை இயக்குகிறார் டைரக்டர் மணிரத்னம். மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் இந்த குறும்படம் தயாராகிறது.

சச்சின் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைக்க, மணிரத்னம் இயக்குகிறார்.

2.08 செக்கனில் ஓர் உலக சாதனை (Video)


சின்ன விடயமானாலும் அதனை வித்தியாசமாய் செய்தால் உலகம் நம்மை திரும்பி பார்க்கும். அந்த வகையில் இங்கு ஒரு சிறுவன் பார்ப்பதற்கு இலகுவாக இருந்தாலும் கடும் முயற்சி பயனால் உலக சாதனை படைத்துள்ளான்.

10 வயதான மரிலாண்ட் என்னும் சிறுவன் வெறும் பிளாஸ்டிக் கப்புகளை வைத்து மிக விரைவாக பல்வேறு கோணங்களில் அடுங்கி சாதனை படைத்துள்ளான். அதாவது வெறும் 2.08 செக்கனில் இவ் உலக சாதனையை படைத்துள்ளான்.

உயிர் காக்கும் Ambulance உயிர்குடிக்கும் (Video)

ஈரான் நாட்டில் நோயாளியை வைத்தியசாலைக்கு எடுக்துச் செல்லும் போது வீதியோரம் கூடிநின்றவர்கம் மீது மோதியவண்ணம் சென்றுள்ளது இவ் Ambulance மோதிச் சென்றபோதும் எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும் காயங்களுடன் தப்பித்தனர் எனவும் தெரியவருகின்றது.


பாம்பை விழுங்கும் தவளை (Video)

Bullfrog (காளைமாட்டுத்தவளை) அல்லது American Bullfrog என அளைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.


இருதயம் மூலம் ஐபாட்களை சார்ஜ் செய்யலாம்


இருதயம் மூலம் ஐபாட்களை சார்ஜ் செய்யலாம்..

வீட்டை விட்டு வெளியே சென்ற போது உங்கள் செல்போன் சார்ஜ் இறங்கிப்போய் விட்டால் என்ன செய்வது? கவலைப்படவேண்டாம்.

உங்கள் இருதயமே சார்ஜ் செய்து விடும். உடல் இயக்கத்தை வைத்து பொருள்களை சார்ஜ் செய்யும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு குட்டி சிப்பை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இது உடல் அசைவு மூலம் செல்போன், ஐபாட் போன்ற சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் மொபைல் போனுக்கு ஜார்ஜ் ஏற்றப்பட்டால் பேட்டரிகளே தேவைப்படாது.