Saturday, December 25, 2010

6 வருடமாகியும் ஆறாத வடுக்கள்...

கடல்அலை எம்மை துவம்சம் செய்து 6 வருடங்கள் ஆகின்றன... புதிரான "சுனாமி" என்ற வார்த்தை இப்போது, அது ஒரு தமிழ் வார்த்தை என்று நம்பப்படும் அளவுக்கு எம்மில் இரண்டறக் கலந்துவிட்டது. அகதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிக்கொடுத்த தினமது. எம்மில் பலர் அந்த தினத்தில் நிர்வாணக் கோலத்தில் பிணக் குவியல்களில் கண்டதை நினைக்கும்போது இப்போதும் எனக்கு அழுகைதான் வருகின்றது. 

உறவுக்காக உயிரை கொடுப்பேன் என்று நான் கேள்விப் பட்டுத்தான் இருக்கிறன். அனால், அன்று அதனை என் கண்ணுடாக கண்டது, இரத்தத்தில் எழுதப்பட்ட சுவடுகள். யதார்த்தத்துக்குப் புறம்பாக கடல் அலை எம் வீடு தேடிவந்து எம்மை நாடு வீதிக்கு (பேச்சுக்காக சொன்னேன் நடு வீதி என்று; அந்த வேளையில் வீதிகள் கூட இருக்கவில்லை...) கொண்டு வந்து எம்மை துவம்சம் செய்தது. பட்டவர்கள் எல்லாம் அக்கரையோடு...., தொட்டவர்கள் எல்லாம் சக்கரயோடு ஆனது நிவாரணப் பணிகள்.

எத்தனை வருடம் ஆனாலும் அழியாத வடுக்கள் அது... வருடம் 6 ஆகியும் இன்னும் கரையோர வாழ்மக்கள் எல்லோருக்கும் நிரந்தர வீடுகள் சரியாக கிடைத்த பாடில்லை... இன்றும் அகதி முகாம்களில் மக்கள் வரிசையில் காத்து கழிப்பறை செல்லவேண்டிய நிர்பந்தத்துக்குள் அவர்கள் உள்வாங் கபட்டு இருக்கிறார்கள். பேசுவோர் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள், பார்பவர்கள் பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள். நமது முடிவி நமது கைகளில் மட்டுமே..

Details of displaced families and deaths in the Batticaloa District as at 1200hrs on 30/12/2004
  No. of displaced familiesNo. of IDPsDeathsmissingcamps
1.Manamunai North
10,590
2,760
1,148
330
28
2.Kattankudy
6,183
400
105
94
12
3.Paddipalai
3000
0
0
0
7
4.Vellavely
2,655
1,615
0
0
6
5.Arayampathy
3,456
625
35
18
7
6.Vaharai
4,332
0
211
88
4
7.Oddamavady
800
0
1
0
1
8.Kiran
550
0
33
2
3
9.Koralai Pattu Centre
1,900
0
1
2
4
10.Chenkalady
3,837
1,236
22
5
8
11.Valachenai
5,580
1,050
146
95
4
12.Kaluvanchikudi
7,580
5,200
70
50
8
13.Eravur Town
175
0
1
0
1
14Vavunathivu
0
0
21
0
0
 Total
50,438
12,886
1,794
684
93
 
Download PDF map of Kalmunai 
Kalmunai vicinity 2004 Tsunami death toll
City
Deaths
Kalmunai2,534
Sainthamaruthu2,010
Pandiruppu1,711
Maruthamunai1,736
Neelavanai   580
Total
8,571

Wednesday, December 8, 2010

மூங்கில் பூக்கள்

Muli Bamboo Seeds in Aizawl, Mizoram , India

Bamboo Flowering in Aizawl, Mizoram , India

Bamboo Flowering in Aizawl, Mizoram , India

Muli Bamboo Seeds in Aizawl, Mizoram , India

Muli Bamboo Seeds in Aizawl, Mizoram , India

Bamboo Flowering in Aizawl, Mizoram , India

Nokia Secret Codes!!

#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.

Nokia 6500 Slide Phone

#3283# – உங்கள் மொபைல் செட் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அந்த நாளை அறிய.

#746025625# – சிம் மூலம் ஓடிக் கொண்டிருக்கின்ற கடிகாரத்தினை நிறுத்த.

#67705646# – மொபைல் ஆப்பரேட்டரின் லோகோ திரையில் தோன்றுகிறதா? அதனை நீக்க விரும்புகிறீர்களா? இந்த கோட் எண்களை அமைத்து அழுத்தவும்.

#73# – விளையாடிக் கொண்டிருக்கும் கேம்ஸில் பெற்ற ஸ்கோர்களை புதியதாக செட் செய்திடவும் போன் டைமரை மாற்றவும் இது பயன்படும்

#0000# – அல்லது * #9999# – உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பினை அறிய.

#06# – மொபைலின் அடையாள தனி எண்ணை அறிந்து கொள்ள.

#92702689# – மொபைல் போனின் வாரண்டி குறித்த தகவல்களை (சீரியல் எண், வாங்கிய நாள், ரிப்பேர் செய்த நாள், இதுவரை இயங்கிய லைப் டைம் ) அறிய இந்த கீகளை அழுத்தவும்.

#7760# – தயாரிப்பு வரிசை எண்ணை அறிய

nokia e series3 341 Challenger Mobile Offers Free Internet Phone Calls WorldWide for Certain Nokia Users
#bta0# புளுடூத் மேக் அட்ரஸ் தெரிந்து கொள்ள.

#147# – நீங்கள் நோக்கியா மொபைல் போனில் வோடபோன் சர்வீஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இறுதியாகப் பயன்படுத்திய போன் எண்ணை அறிந்து கொள்ள.

#2640# – மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் குறித்து அறிய.

#7328748263373738# – போனில் பதிந்து தரப்பட்டிருக்கும் டிபால்ட் செக்யூரிட்டி கோட் குறித்து அறிந்து கொள்ள.

#43# – கால் வெயிட்டிங் நிலை குறித்து அறிய.

#2820# – புளுடூத் தகவல் தெரிந்து கொள்ள.

#7370# – மொபைல் போன் மெமரியை பார்மட் செய்திட .

#delset# # – ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இமெயில் செட்டிங்ஸ் அமைப்பினை அழித்திட.

Nokia Logo
#pw+1234567890+1# – மொபைல் செட்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள.

#pw+1234567890+4# – உங்கள் சிம் கார்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்துத் தெரிந்து கொள்ள...

Sunday, November 14, 2010

Wednesday, October 13, 2010

பாட்டுப்பாடவா...

அய்யய்யோ வேணாம்..!!
இந்த பதிலைத்தான் வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க..!

சின்ன வயசுலருந்து பாடறதுன்னா ரொம்ப ஆசை.
ஆனா,அது கேக்கறவங்களுக்கும் இருக்கணுமே...

தயவு செஞ்சு பாடாதே..!! வேணாம்..!! விட்ரு...!!
கழுதை கத்தற மாதிரியே இருக்கு..!!

தூங்கிருவோம்...குழந்தை பயந்துக்கும்...

இப்டி எல்லாம் சொல்லியே ஒரு மைக்டைசனை ச்சீ...
மைக்கேல் ஜாக்ஸன முடக்கி வச்சுட்டாங்க...

நம்மளும் ஒரு SPB, யேசுதாஸ், ஹரிஹரன் மாதிரி
ஆகலாம்ன்னு பாத்தா யாராவது ஒருத்தர் மாதிரிதான்ப்பா
ஆக முடியும்ன்னு நக்கல் வேற...
SPB மாதிரி ஆகலாம்ன்னா, அவரு மாதிரி உடம்புதான்
வளருதே தவிர குரல் வந்த மாதிரி தெரியல...

அந்த மைக் மேல அப்டி ஒரு ஆசை..!!

மைக் மோகன்,மைக் முரளி படத்த எல்லாம் இதுக்காகவே
பலமுறை பாத்து இருக்கேன்.எங்க ஊரு பண்டிகை எல்லாத்துலயும்
ஆஸ்தான அறிவிப்பாளர் நான்தான்..!!
(பெரிய SUN TV, Vijay TV அறிவிப்பாளர் கூட இப்டி பந்தா பண்ண மாட்டான்)

நம்ம பாடறத காசு கொடுத்து கேக்க வேணாம்..!!
காது கொடுத்து கேக்கலாம் இல்ல..!! கேக்க மாட்டாங்க..!!
பொறமை புடிச்ச பய புள்ளைங்க..!!

இப்பல்லாம் எந்த சேனல போட்டாலும் விதவிதமா
நிறையபாட்டு போட்டிங்க நடக்குது..!!
அதுல பாடறவங்களுக்கு முதல்விதிமுறையே
நல்லா பாட தெரியுதோ இல்லையோ..??!!
பாத்துட்ருக்கறவங்க எல்லாத்தையும் நல்லா
அழுவ வைக்க தெரியணும்.
நல்லா ஓஓஓஓ...ன்னு கதறி கதறி அழுவணும்.
அப்பதான் ஏதோ டிஆர்பி ரேட்டிங் ஏறுமாம்.
அதுவும் இந்த குழந்தைங்கள இவங்க பண்ற டார்ச்சர் இருக்குதே..!!
அந்த குழந்தை போட்டில இருந்து வெளிய போறதயே ஏதோ செவ்வாய்
கிரகத்துக்கு போற மாதிரி பில்டப் பண்ணுவாங்க..!!ரொம்ப கொடுமைங்க..

குழந்தைங்க பாடறதுக்கு ஏதோ அயோத்திவழக்குக்கு
தீர்ப்பு சொல்ற மாதிரி 3 நீதிபதிகள் வேற....

"குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் 
   மழலைச் சொல் கேளாதவர்"

அப்டின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி குழந்தைங்க எப்படி பாடினாலும் அழகுதான்... ஆனா,இந்த நீதிபதிங்க குடுப்பாங்க பாருங்க கமெண்ட்..!!
ரொம்ப கேவலமா இருக்கும்..!!

ஏழு கட்டை,எட்டு கட்டை -ன்னு சொல்றாங்களே நம்ம டிரை பண்ணி பாப்போம்ன்னு பாத்தா வீட்ல விறகு கட்டைய எடுத்து அடிக்க வர்றாங்க...

சாதகம்.. சாதகம்... அப்டின்னு சொல்றாங்களே..!!
நம்ம ஜாதகத்த பத்திதான் ஏதோ சொல்றாங்க போல இருக்கு அப்டின்னு ஜோசியக்காரங்ககிட்ட போனா அதுக்கு நீங்க இங்க வரக்கூடாதுங்க..!! கழுத்தளவு தண்ணியில நின்னு சரிகமபதநிச சொல்லணும்.
ஆனா,வந்ததுக்கு ஒண்ணு சொல்றேன்..
உங்களுக்கு தண்ணியில கண்டம் அப்டின்னு சொல்லி
நம்மள அடக்கிருவாங்க....

இப்டிதாங்க நிறைய பேரோட திறமை வீட்டுக்குள்ளேயே முடங்கி போச்சு..!!
நீங்கனாச்சும் உங்க பிள்ளைங்க திறமைய கண்டுபிடிச்சு அத பாராட்டுங்க..!!
அப்பா..!! எப்டியோ வெட்டியா பதிவு போடாம மெஸேஜ் சொல்லியாச்சு..!!

Monday, September 27, 2010

மொக்கை.... மொக்கை...

1. ரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2. ரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா  கோதுமை மாவு  வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
3. றும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
4. கால்ல முள் குத்தாம  இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .! ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. டச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
6. ரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
9. றுபடியும் ஒரு உண்மை :
கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,
ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
11. றுபடியும் சந்தேகம் :
இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
12. டியோட வெட்டினா கூட மறுபடியும் மறுபடியும் தலையுறது எது ..?
'மயிறு ' இது கூட தெரியாதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
13. ரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..?
கரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
14. ஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம் .?
மஞ்சத்தண்ணி மஞ்சள் கலர்ல இருக்கும் , ஆனா பச்சத் தண்ணி பச்சை கலர்ல இருக்காது.!.?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15. ந்த உலகத்துல எல்லோருமே குள்ளமா இருந்தா என்ன ஆகும்.?
டிவி ல காம்ப்ளான் விளம்பரம் போட மாட்டாங்க.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
16. 160 எழுத்துல ( ஒரு sms ) பெரிய நல்ல விஷயம் சொல்ல முடியுமா.?
 'பெரிய நல்ல விஷயம்' அப்படின்னு சொல்லுறதுக்கு எதுக்கு 160 எழுத்து ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17. றுபடியும் ஒரு கேள்வி: 
நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழ விழுதுள்ள ,
அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
18. கொசுவுக்கு கொம்பு இருக்கா  .?
இருக்கு .கொசு அப்படின்னு எழுதும்போது ஒரு கொம்பு போட்டுத் தானே எழுதறீங்க ..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
19. ண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல அதனால போடுறதில்லை.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
20. டிகாரத்துல இருக்குற முள் எந்த திசைல சுத்துதுன்னு தெரியுமா ..?
ஏற்கெனவே சுத்திட்டிருந்த திசைல தான் சுத்துது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Facebook இல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா?

Facebook ஆல் கொடுக்கப்பட்ட புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் பின்வரும் நாடுகளில் Facebook இல் இணைந்துள்ள ஆண், பெண் மற்றும் மொத்த எண்ணிக்கையும் உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

Sri lanka :
673,800 people
434,440 Male
228,660 Female

India:
13,612,320 people
9,391,080 Male
4,050,920 Female

Pakistan
2,423,680 people
1,602,380 Male
787,220 Female

United kingdom:
27,279,920 people
12,706,600 Male
13,800,880 Female

United states:
138,660,280 people
59,429,320 Male
76,748,940 Female

Australia:
9,169,220 people
4,119,160 Male
4,805,300 Female

New Zealand:
1,695,320 people
726,320 Male
919,800 Female

Germany:
11,119,240 people
5,464,500 Male
5,469,420 Female

France:
18,875,380 people
8,888,400 Male
9,568,240 Female

Norway:
2,412,620 people
1,139,500 Male
1,183,440 Female

Canada:
17,050,280 people
7,440,860 Male
8,900,460 Female

Bangladesh:
976,540 people
717,980 Male
248,900 Female

China:
57,220 people
31,180 Male
23,380 Female

Italy:
16,589,460 people
8,813,760 Male
7,633,500 Female

Japan:
1,426,480 people
665,840 Male
727,980 Female

Malaysia:
8,187,460 people
4,261,300 Male
3,834,760 Female

Maldives:
81,800 people

Nepal:
572,980 people

Saudi Arabia:
2,558,720 people

Singapore:
2,300,180 people

United Arab Emirates:
1,792,220 people

Vatican city
800 people

இந்தியா, இலங்கை,பாகிஸ்தான்,பங்களதேஷ், சீனா போன்ற நாடுகளில் facebook இல் இணைந்துள்ள ஆண்களின் எண்ணிக்கையிலும் பார்க்க பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக உள்ளது.

100 கோடிக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 1 கோடி 36 இலட்சம் பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

Facebook இன் பிறப்பிடமான 30 கோடி சனத்தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 13 கோடி 86 இலட்சம் பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

இங்கிலாந்து,அமெரிக்கா,அவுஸ்திரேலியா, நியுசிலாந்து,ஜெர்மனி, பிரான்ஸ், நோர்வே, கனடா,ஜப்பான் போன்ற நாடுகளில் facebook இல் இணைந்துள்ள ஆண்களின் எண்ணிக்கையிலும் பார்க்க பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.

133 கோடி சனத்தொகையை கொண்ட சீனாவில் வெறும் 57 ஆயிரம் பேரே facebook இல் இணைந்துள்ளனர்.

ஏறத்தாழ 3 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட மாலைதீவு சனத்தொகையில் சுமார் 80 ஆயிரம் பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

சுமார் 1000 சனத்தொகையைக் கொண்ட வத்திக்கான் city யில் 800 பேர் facebook இல் இணைந்துள்ளனர்.

Friday, August 13, 2010

ரமழான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு ஒபாமா வாழ்த்து

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் நோன்பு வாழ்த்துகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு காலம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானதையொட்டி வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்:
சிறந்ததொரு உலகைக் கட்டியெழுப்ப நாம் விரும்பினால் அதற்கான மாற்றங்களை எமது இதயத்திலிருந்தும் எமது சமூகத்திலிருந்துமே ஆரம்பிக்க வேண்டுமென்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டுமென ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நிகழ்வொன்றை நடத்த எதிர்பார்த்திருப்பதாகக் கூறியுள்ள ஒபாமா,நீதி,முன்னேற்றம்,சகிப்புத்தன்மை,அனைத்து மனித நடத்தைகளுக்கான கௌரவம் என்பவற்றுக்கான இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை ரமழான் சிந்தனைகள் எமது நினைவிற்கு கொண்டுவருகின்றன.
இங்கு அமெரிக்காவில் ரமழான் நோன்பானது,இஸ்லாம் அமெரிக்காவின் ஓர் அங்கமாக எப்போதும் இருக்கிறது என்பதையும் எமது நாட்டுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் அசாதாரண பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறது.
இந்நிலையில் ரமழான் நோன்பு தினத்தை வரவேற்கும் உலகெங்குமுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Sunday, July 25, 2010

தற்கொலை செய்ய சிறந்த வழிகள்...

இன்னும் தற்கொலை முயற்சியில் வெற்றி பெற முடியவில்லையா?

இதோ .....மிக சிறந்த வழி..
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
கல்யாணம் பண்ணிக்கோ ....