Wednesday, February 3, 2010

கலாய்க்கலாம் வாங்க....




இனிப்பான சேதி
"என்னடி, எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கிறே, ஏதாவது இனிப்பான சேதி உண்டா?" "ஆமாண்டி! என் மாமியாருக்கு புதுசா `சர்க்கரை' வியாதி வந்திருக்கு அந்த சந்தோஷம்தான்!

மெடிக்கல் சென்ரர் அருகில் இருவர்
"எதுக்கு நிறைய பேர் அந்த டாக்டர்கிட்ட ஆபரேசனுக்கு போறாங்க?"
"நோயாளி இறந்திட்டா,குடும்பத்தில ஒருத்தருக்கு ஆஸ்பத்திரியிலே வேலை கொடுக்கிறார்"

கடவுளுக்கு எப்ப கடுமையான கோபம் வரும்?
கேள்வி:-கடவுளுக்கு எப்ப கடுமையான கோபம் வரும்.?
பதில்:-கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்ணு கர்ப்பம் ஆகிவிட்டால் அதனை அறிந்த பெற்றோர், 'ஐயோ கடவுளே இப்படி பண்னிட்டியே...' என்று புலம்பும் போது....அதாவது யாரோ செய்த தப்புக்காக கடவுள் மீது பழி வருமே...அப்போது தான் கடவுளுக்கு கடுமையான கோபம் வரும்.

நீதிமன்றத்தில் இருவர்
"சர்வரை சாட்சி சொல்ல அழைத்தது தப்பாப் போச்சு"
"ஏன்?"
"நீதிபதி 'ஆர்டர்' 'ஆர்டர்' என்றதும் பழக்க தோஸத்தால 'என்ன ஐட்டம் வேணும் சார்' என்று கேட்க ஆரம்பித்திட்டனே "


சங்கீத கலாநிதியும்
1."எனக்கு சங்கீத கலாநிதின்னு பட்டம் கொடுக்கபோறதா சொன்னீங்க இப்ப சங்கீதா கலான்னு பட்டம் கொடுத்திருக்கிறீங்களே?"
2."நிதி வசூலாகல"

டாக்டரும் தாதியும்
டாக்டர்:- "பத்தாம் ந்ம்பர் நோயாளியிடம் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா?"
தாதி:- "ஆமாம் டாக்டர் அந்த நோயாளி இப்போது 12 ஆம் இலக்க கட்டிலில் இருக்கிறார்?"

இரு திருமணமான பெண்கள்
:-"ஏண்டி குழந்தை பிறக்கவில்லையே என்று டாக்டரிடம் போனியே என்னச்சு?"
:-"நிறைய மருந்துகள் தந்தார்-ஆனால் பலனளிப்பதகஇல்லை"
:-"அப்படியானால் உனது கணவர் என்ன சொல்கிறார்"
:-"டாக்டரை மாற்று என்கிறார்"
:-"ஐய்யோ.. அப்ப டாக்டர் என்ன சொன்னார்?"
:-"டாக்டர் புருசனை மாற்று என்கிறார்..நான் என்ன செய்ய"


பல் டாக்டரும் நோயாளியும்
"Doctor ஒரு பல் பிடுங்க நூறு ரூபாய் தானே.. எதுக்கு 1000 ரூபா கேட்கிறீங்க..?"
"நிங்க கத்தின கத்திலே, வெளியல இருந்த 9 நோயாளிக ஒடி போயிட்டங்க... அதுதான்"

வங்கி கசியரும் நணபரும்
"தியேட்டரில் டிக்கேட் கிழிச்சுக் கொடுத்து இருந்த உனக்கு, வங்கியில கசியர் வேலை கிடைச்சுருக்கே அப்புறமும் ஏன் சோகமாக இருக்கிறாய்?" "கஸ்டமர் ஒருத்தருக்கு பணத்தை கிழித்து கொடுத்துட்டேன்"


No comments: