Thursday, January 7, 2010

ஆறடிச் சாம்பல்


நாழிகை நாடகங்கள்...
அரங்கேற அனுமதிக்கப்படுகின்றன.
தூரிகையின் வரத்தினால்...
ஆறெட்டுச் சிறகுகளுடன்...
இறக்கைகளின் இடுக்கினுள்..!

ஊண் உறக்கமற்ற உயில் எழுதி...
மச்சம் கொண்ட மயிலிறகுடன்...
பஞ்சு நிரப்பிய மேகங்களாக...
கடைத்தெடுத்த எதிர்பார்புகளுடன்...
காத்திருப்பன்..!

அஞ்சி பத்து சந்திரன்கள்,
அடுக்கி வைத்த அப்பங்களாக...
சாம்பல் பிடித்த அகப்பையில்...
உப்புத் தண்ணி சம்பலுடன்...
நாறிப்போச்சு...

மனித நரம்புகளில் மின்சாரமெடுத்து
வரம்புதனில் வண்டியோட்டி...
ஊறிய முளைகளுடன் உருவில்
நானும் கூழாங்கற்களானேன்.

எட்டிப்பிடித்த ஏணிகளில்
தொட்டில் தொங்கும் தொழுவங்களாக...
சுருக்கிக் கட்டிய கொடியிலிருந்து..
தொப்பென விழும் வௌவால்களாக..
பூசித்துப் போக நியாயமில்லை...

சபித்தாலும், சாபமிட்டாலும்
ஆறடிச் சாம்பலுக்குள்...
பூத்திருப்பன்!
என்றும் காத்திருப்பன்...

- ஏ.ஜ.எம்.பிறவ்ஸ்.