Saturday, April 30, 2011

மனம் உங்களை ஆளுகிறதா? அல்லது நீங்கள் மனதை ஆளுகிறீர்களா?




- முஹம்மட் பிறவ்ஸ்


ஒவ்வொருவருக்கும் உடலளவில் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். சிலர் ஊனமுற்றவர்களாக இருப்பர் சிலருக்கு உறுப்புகளே இருக்காது. ஆனால், எப்படியாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் இருக்கும். மனம் எப்படியானது என்று பல கவிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம், எல்லாமே தனிவிதம். ஒருவர் மனதில் உள்ளதை இன்னொருவரால் ஊகித்து கிட்டத்தட்ட சொல்லமுடியும். ஆனால், ஒருவன் மனதை இன்னொருவரால் அறியவே முடியாது. இதுவும் பெண்கள் மனது என்றால்…?

ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால்தான் அறியமுடியும் என்பது வெறும் பேச்சுக்காக சொல்வது மட்டுமே. ஒரு பெண் தனது பிரச்சினைகளை இன்னொரு பெண்ணிடம்தான் மனம் திறந்து சொல்லுவாள். அதனால்தான் அப்படி சொல்லியிருக்ககூடும்.
மனம் என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? அதற்கு உருவம் இருக்கிறதா? என்று நம் எல்லோருக்கும் நீண்டகாலமாக சந்தேகம் இருந்து வருகின்றது. மனதைத் தொட்டுச்சொல்லுங்கள்ர்பார்ப்போம் என்றால், எல்லோருமே நமது நெஞ்சில் இடது பக்கமாக கையை வைப்போம். இதை தெரிந்தோ, தெரியாமலே பின்பற்றிவருகின்றோம். நாம் மனம் என்று சுட்டிக்காட்டுவது இதயத்தைத்தான். அங்குதான் மனமும் இருப்பதாக எண்ணுகிறோம். உண்மையை சொல்லப்போனால், இதயம் இடதுபக்கமே இல்லை. இதயம் நெஞ்சறைக் கூட்டின் மத்தியிலிருந்து சற்று இடதுபக்கமாக சாpந்து இருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு அப்போ மனமும் இடதுபக்கமாக சற்று சாpந்து இருக்கிறது என்று முடிவெடுத்து விடாதீர்கள். மனம் வேறு, இதயம் வேறு. இதயம் நமது உயிரோட்டத்துக்காக துடித்துக் கொண்டிருப்பதால் நாம் மனம் என்று கருதுகிறோம் தவிர வேறில்லை. இதயம் தானாக துடிப்பதில்லை அதற்கு கட்டளையிடவும் ஒன்று இருக்கிறது. மூளைதான் உடலின் சகல பாகங்களையும் ஆளுகின்றது. அது தனது செய்திகளை (கணத்தாங்கங்களை) நரம்பினூடாக அனுப்புகிறது. மனதுக்கும் மூளைக்கும் தொடர்பிருக்கிறதே தவிர, மனம் மூளையில்லை. முனம் என்பது உருவமில்லா ஓர் உணர்வு. அது வெளிப்படுத்தப்படும் இடம்தான் நமது மூளை.

மனதும் மனதும் ஒத்துப்போனதால் எங்களுக்கு காதல் வந்தது, மனக்கசப்பினால் எங்கள் காதல் முறிவடைந்தது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். காதல் என்றால் மனம், மனம் என்றால் காதல். வீதியில் ஒரு அழகான பெண் போகும்போது மனம் நம்மை திரும்பி பார்க்கச்சொல்லும், அதேசமயம் இது பாவம், தவறான விடயம் என நமது அறிவுக்கு தெரியும். அந்த இடத்தில் நாம் திரும்பிப் பார்த்தால் நம் மனம் நம்மை மிஞ்சிவிடுகிறது. யார் போனால் நமக்கென்ன நமது வேலையைப் பார்ப்போம் என்று நீங்கள் சென்றால், உங்கள் மனம் உங்களுக்கு அடிமை. மனமும் சாத்தனும் மிக நெருங்கிய நண்பர்கள், இரண்டறக்கலந்துவிட்டவடர்கள் வீதியில் ஒருவருடைய பொருள் ஒன்று தவறவிடப்பட்டுக்கிடந்தால், நமது மனம் அந்தப்பொருள் நம்மிடம் இருந்தால் எப்படியிருக்கும்? என்று சிறகடிக்கத் தொடங்கிவிடும். அது யாருடைய பொருளே? தோலைத்தவர்கள் கஷ்டப்படுவார்களே என்று எண்ணத் தோன்றாது. நமது மனம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கும். சில வேளைகளில் வீண் வம்புகளிலும் மாட்டிவிடும்.

முனம் என்பது தவறான விடயமே அல்ல. மனம் சொல்வதை நாம் கேட்டால் பிரச்சினை. நம்மால் மனதைக் கட்டுப்படுத்த முடியுமானால் நமது மனம் நமக்கு அடிமை. மனம் எப்போதும் திறந்திருக்கும். அதை பொறுமை எனும் சாவிகொண்டு பூட்டிவிட்டால் பிரச்சினைகளே வராது. சிலருக்கு மூக்கிலே கோபம் என்பாh;கள். எதற்கெடுத்தாலும் பிரச்சினை, அடிதடி, சண்டை, கோபப்படுதல், திட்டுதல் அவா;களின் ஒரு கணமும் சிந்திக்காது, இதற்கான தீர்வு வன்முறை என்று முடிவுசெய்திடும். இதனால் வருகின்ற பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காது. பிரசினைகள் வந்தபின் அடே, என் மனதைக் கட்டுப்படுத்தியிருக்கலாமே என்று எண்ணத்தோன்றும். அதுதான் நம் மூதாதையர்கள் “மனம் போன போக்கிலே போகாதே, நன்றாக சிந்தித்து செயற்படு” என்று சொல்லுவார்கள். நாம் ஒரு விடயத்தை செய்யும்போது, இதை செய்யத்தான் வேண்டுமா? செய்தால் என்ன பலன்? என்ன பின் விளைவுகள் ஏற்படும்? நமக்கு சாதகமா அல்லது பாதகமா? என்று தூர நோக்கில் சிந்திக்க வேண்டும். எப்படியும் வாழலாம் என்று நினைக்காமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைக்க வேண்டும். ஒரு அறிஞர் கூறும்போது “யார் உண்மையான வீரர்கள் தெரியுமா? போட்டியிட்டு ஜெயிப்பவன் இல்லை, தனது மனத்துடன் போராடி மனதை ஜெயிப்பவன்தான் உண்மையான வீரன்” என்றார். வீரம் என்பது வெளியில் தெரிவதில்லை உங்களுக்குள்ளேயே இருப்பதுதான் உண்மையான வீரம்.

`சொல்பவனைக் கவனியாதே, சொல்வதைக் கவனி' என்று சொல்வார்கள். ஆனால், யாரும் நமக்கு அறிவுரை சொன்னால் பொதுவாகப் பிடிக்காது. நமக்கு அட்வைஸ் பண்ண இவர் யார் என்று கேட்போம். யார் நமக்கு என்ன சொன்னாலும் நம் மனதுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இன்னும் சிலா; வித்தியாசமாக இருப்பாh;கள். யாh; எதைச் சொன்னாலும் அதை சீh;தூக்கிப்பாh;க்காமல் அப்படியே செய்வாh;கள். இது நமக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று யோசிக்கமாட்டார்கள். நாம் வாழ்க்கையில் இப்படியான பல மனிதர்களை சந்தித்திருக்கலாம்.
அவர்களை அவர்களுடைய மனம் மிதமிஞ்சிப்போனால் அவர்கள் பைத்தியக்காரர்ளாகி விடுவார்கள். நாம் என்ன செய்கின்றோம் என்பதை அவர்களாலேயே உணரமுடியாத நிலையில் இருப்பார்கள். அவர்களை எவ்வழியிலும் நம்மால் திருத்த இயலாது. மேலைத்தேய நாடுகளில் (அதிகமாக) மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உளவியல் ஆற்றுப்படுத்துனா;கள் இருப்பார்கள். இவர்களது சேவையானது மிகவும் வித்தியாசமான முறையில் இருக்கும்.

மனங்களின் பல்வகைமைக்கு அவர்கள் வாழும் சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. ஒருவர் மீனவப் பிரதேசத்தில் வளர்ந்தால் அவர்களது மனம் வாழ்வு என்றால் இப்படித்தான் இதுதான் நமது பேச்சு, பாவனை, தொடர்பாடல் என பழக்கப்பட்டுவிடும். அவன் பிறிதொரு சூழலுக்கு செல்லும்போது அவனது மனது கட்டுப்படுத்த (இசைவாக்கமடைய) நீண்டகாலம்
தேவைப்படும்.

நன்றி: இருக்கிறம்

No comments: