Sunday, July 18, 2010

இலங்கையில் பேஸ்புக்கிற்கு எதிராக 50 முறைப்பாடுகள்


இலங்கையில் பேஸ்புக்கிற்கு எதிராக பெண்கள் மற்றும் சிறுவர் அமைப்பினால் 50 முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ளன.
பேஸ்புக்கை பாவிப்பவர்களின் புகைப்படங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதனாலேயே இதனைத் தடை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தே இவ் அமைப்பினால் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, தமக்கு இது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்த இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷா பல்பிட்டிய பேஸ்புக்கைத் தடைசெய்வது மனித உரிமை மீறலாகுமென்றும் கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் அமைப்புக்கு பேஸ்புக் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்குள் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேநேரம் முகம்மது நபி தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் தடைசெய்யப்பட்டது. இதேபோன்று அண்மையில் பங்களாதேஷில் அந்நாட்டுப் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசியல்வாதிகள் தொடர்பாக தவறான செய்திகள் பரவியமையினால் பேஸ்புக்கை அந்நாட்டு அரசு தடைசெய்தது.

1 comment:

Anonymous said...

ayyo... aapputhan